Thursday, January 6, 2011

நான் யார் ??


நான் யார் என்ற தேடலின் முயற்சியில்....

இது ஒரு சுயசரிதை என்றே சொல்லலாம் .நான் கடந்துவந்த பாதை ... நடந்துகொண்டிருக்கும் பாதை... இவை எனக்கு கற்றுகொடுத்தவை ,கற்றுகொண்டிருப்பவை அனைத்தும் இங்கே... என் உணர்வுகளும் கூடத்தான் :)


நாம் வாழ்க்கையில் தினமும் ...நண்பனாக, பிள்ளையாக, சகோதர/சகோதரியாக, கணவன்/மனைவியாக, தாய்/தந்தையாக பல பாத்திரங்கள் ஏற்கிறோம் . அதற்கு ஏற்றார்போல நம் உணர்வுகளும் மாறுகிறது.உதாரணத்திற்கு நம் தவறை நம் பெற்றோர் சுட்டிகாட்டினால் அது advice என்று வேறுப்படைவோம் . அதையே நண்பன் சொன்னால் அது suggestion என்று சாந்தமாக யோசிப்போம் , இதை நம் கணவனோ/மனைவியோ சொன்னால் நம்மை criticise செய்வதாக கோபம் வரும் . இதையே நம் பிள்ளைகள் சொன்னால் ... நமக்கே புத்தி சொல்லுமளவு பெரியதனம் என்று ஆச்சர்யம் கலந்த கோபம் வரும் .... சரிதானே??? நம் உணர்வுகள் ஒரே விஷயத்துக்கு பல்வேறு சுழ்நினையில் பல்வேறு மனிதர்களிடம் மாறுகிறது இல்லையா?
நான் யார்??
 இப்படிப்பட்ட என் உணர்வுகளை ... எனது பார்வையில் எனது சுற்றம் ..என்னை "மனிதனாக "வளர்த்துக்கொண்டிருக்கும்   சில உணர்வுகள்,நிகழ்வுகள் இவற்றை பகிர்ந்துகொள்ள விரும்பி எனது கிறுக்கல்கள் ஆரம்பிக்கிறேன் ..

No comments:

Post a Comment