நான் யார் ?? சில மாதங்களாக என்னக்குள் நான் கேட்க்கும் கேள்வி.
ஏன் சில மாதங்களாக என்று நினைக்கலாம் ... நான் இப்போது போய்கொண்டிருக்கும் பாதையில் ஏற்படும் நிகழ்வுகள் என் தேடலை அதிகமக்கிக்கொண்டே இருக்கிறது .
நான் என்பது ஆன்மாவா ?உடலா ?அதாவது சுருக்கமாக சொன்னால் இந்த பெயர்
யாருக்கு சொந்தம்....ஆன்மாவிற்க?உடலுக்கா?
நாம் படும் மன வேதனையோ ?அல்லது உடல் வேதனையோ? எதுவாக இருந்தாலும்- இன்ப துன்பங்கள் நம் உடலுக்கா? அல்லது ஆன்மாவிற்க?
ஆன்மாவிற்கு அழிவு இல்லை .அதற்க்கு இன்பதுன்பம் கிடையாது என்று தான் கூற கேள்வி .நாம் செய்யும் நல்லது கேட்டது வைத்தே நம் பிறப்பு, நம் இன்ப துன்பம் என்று எல்லாம் கேட்டிருகிறேன் ...
என் கேள்வி ..ஆன்மாவிற்கு அழிவில்லை சரி... அது பல பிறப்புக்கள் எடுக்கிறது அதுவும் அது முன் பிறப்பில் செய்த நன்மை தீமையை வைத்து....சரி...அதற்க்கு இன்ப துன்பம் இல்லை...எப்படி?
ஆசையே பிறவிக்கு காரணம் 'ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று கூறியிருகிறர்களே..அப்படியென்றால் ஆத்மாவிற்கு ஆசை உண்டு தானே? இன்பதுன்பம் உண்டு தானே?
சில பெரியவர்கள், நோயாளிகள் இறவாமல் (இழுத்துகொண்டிருகிராகள்)கோமாவில் இருந்தால் ஏதோ ஆசை அதுதான் என்று கூறுவார்கள்.என் அம்மா கூட அப்படி இருந்த பொது என்னை கல்யாண பெண் போல அலங்காரம் செய்து காண்பித்தார்கள்...அப்படி என்றல் ஆன்மாவிற்கு இது எல்லாம் உண்டு தானே ?
அப்படி இருக்க ஆன்மா வந்து தங்க இடம் கொடுத்த இந்த உடல் ஏன் கஷ்டப்படவேண்டும்?தான் அனுபவிக்க பிறந்து அதனால் அது ஆடும் ஆட்டத்தால் கஷ்ட படுவது உடல்....இது' தங்க இடத்தை கொடுத்தா மடத்தை பிடித்த'கதை போல் இருக்க வீடு கொடுத்த உடலையே பாழாக்கும் ஆளை போல் இருக்கிறது எனக்கு.
தொடருவோம்...இன்னும் ஆன்மா , மனம், உடல் பற்றிய நம் வாதம்....தேடல்களை...
No comments:
Post a Comment