எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் ...அசைவ உணவு சாப்பிடுவோர் அம்மாவாசை, பொர்ணமி, வெள்ளி, சனி, பூஜை நாட்கள் என்றால் அசைவம் சாப்பிட கூடாது என்கிறார்கள்..அதின் அர்த்தம் என்ன??
அன்று சாப்பிட்டால் பாவமா?ஏன்?பாவம் என்றால் என்றைக்கு சாப்பிட்டாலும் பாவம் தானே?
கொலை என்று செய்தாலும் பாவம் தான் அல்லவா ? யாரவது தெரிந்தால் விளக்குங்கள்.தயவு செய்து..
என் தோழி ஒருவர் சமீபத்தில் சொன்னார் யாரோ ஒரு சாமியார் தன் சொற்பொழிவில் கூறினார்"உனக்கு அடிபட்டால் எப்படி வலிக்கிறது. உன்னை அடித்தலோ அல்லது கை கால் முறிந்தாலோ தாங்க முடிகிறதா? அது போல தான் மிருகங்களுக்கும் "என்று கூறியது கேட்டதில் இருந்து அசைவம் சாப்பிடுவது விட்டு விட்டேன் என்று...சிரிப்பத அழுவாத என்று தெரிய வில்லை ... ஒரு பக்குவம்/மன முதிர்ச்சி /maturity வந்தவர் யாரோ ஒருவர் சொல்லி தான் இந்த பச்சதப உணர்ச்சி... இல்லை .. அது சரியான வார்த்தை இல்லை.ஆங்கிலத்தில்' EMPATHY' என்று சொல்லும் வார்த்தையே சரி.... அது வருமா?
No comments:
Post a Comment