Sunday, March 11, 2012

மனப்பான்மை

நேற்று ஒருவர்  என்னிடம்  தொலைபேசியில் பேசுகையில் அவர் ஒரு இந்திய விழாவில்  கலந்துகொண்டதாகவும் அங்கு குழந்தைகளுக்காக நடந்த ஒரு ஓவிய போட்டிக்கு அவர் ஒரு தேர்வாளராக இருந்ததாகவும் ,சிலபடங்கள் மிகவும் நன்றாக இருந்ததாகவும் என்ன செய்வது என்று தெரியாத பொது அவர் குழந்தை(வளர்ந்தவர்) வந்து உனக்கு தெரியாதா இந்த இந்திய மக்கள் பற்றி பெரியவர்கள் செய்து பிள்ளை பேரில் தருவார்கள் என்று கூறியதாக கூறினார்...
என்ன இதில் வருத்தம்? நான் இந்தியன் இப்படி சொன்னார்களே என்ற? இல்லை....சொன்னவரும் இந்தியர் ,வெளிநாட்டில் நீண்ட காலம் வாழும் இந்தியர்.அவருக்கு சொன்ன அவர் குழந்தையும் இந்தியர் ஆனால் வெளிநாட்டில் பிறந்தவர்.
சொன்ன விஷயம் மனதை காயபடுத்தியது பெரியவர்கள் பேசாமல் குழந்தை இந்த வார்த்தை சொல்லுமா? அதன் மனதில் இந்த எண்ணம் எழுமா?
ஏன் இந்திய  குழந்தைகள் திறன் அற்றவர்கள? அப்படியென்றால் மூச்சுக்கு மூச்சு தன் குழந்தைகள்  புகழ் பாடும் அவர்கள் பிள்ளைகள்?
எங்கே... யார்... தவறு செய்கிறார்கள் ...எதிர்காலம் தான் சொல்லவேண்டும்.


No comments:

Post a Comment