Tuesday, April 24, 2012

முரண்பாடுகள்

ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு'oxymoron' என்று.அதாவது ஒரே வாக்கியத்தில் இரு வேறு பொருள் குறிக்கும் சொற்களை உபயோகப்படுத்துவது 'முரண்பாடு உள்ளது போல் இருக்கும் சொல் அடுக்கு'தமிழில் எனக்கு உதாரணம் தெரிய வில்லை...ஆங்கிலத்தில்'ill health,original copy'போன்றவை.
அதுபோல் உள்ளது .. நம் வாழ்வில் தினம் பார்க்கும் சில முரண்பாடுகளாக எனக்கு தோன்றுபவை இவை......

 கடவுள் நம்பிக்கை....
நான் காணும் மனிதர்களில் பெரும்பாளானோர் கடவுளை யாராக நினைகிறார்கள் என்றே தெரியாமல் வழிபடுவதாக தோன்றுகிறது.கடவுளை மனிதனாக நினைகிறாகளா?
   கடவுளுக்கு வேண்டுதல்... அதாவது லஞ்சம்....இதை நடத்தி வை இது செய்கிறேன் என்று..
   கடவுளுக்கு செய்யும் உணவில் சில விஷயங்கள் சேர்க்ககூடாது...
  ஒரு பெண்ணிற்கு தூரம் என்றல் கடவுள் இருக்கும் இடம் சென்றால் அசுத்தம் ...உம்ம்ம். இப்படி பல மனிதனை பார்ப்பது போல்,மனிதனை நடத்துவது போல ... ஆனால் என்ன எதிர் பார்ப்பு.... மனிதனால் நடக்க,நடத்த முடியாத விஷயங்களை நடத்த வேண்டும்.... 

இல்லை நான் அப்படி பார்க்கவில்லை என்றல்.... கடவுள் என்பது ஒரு சக்தி மனிதனால் அறிந்துகொள்ள முடியாத ஒன்று என்றல்...அப்போது மேல்சொன்ன ஏதும் செய்யமாட்டோம் இல்லையா?

அடுத்த முரண்பாடாக பட்ட ஒன்று.... இன்றைய பொருளாதாரம் ...அது மிகவும் மோசமாக உள்ளதாகவும்....உலகமெங்கும் பதிக்க பட்டுள்ளது என்றும் சொல்கிறர்கள்.... ஆனால் சில விளையாட்டு வீரர்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து வாங்கி தங்களுக்காக விளையாட வைகிறார்கள். அமெரிக்க மட்டும் அல்ல இந்திய போன்ற நாடுகளிலும் தான்.... என் சந்தேகம் என்ன என்றல்.... உலகமே பொருளாதார கஷ்டத்தில் இருக்கும் பொது இவர்கள்....அல்லது சிலரிடம் (நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட )  மட்டும் பணம் புரளுவது எப்படி?அது மட்டும் இல்லாமல்..விளையாட்டு வீரர்களுக்கு இவ்வளவு பணம் தேவையா?அவர்களால் நாட்டிற்கோ,பொருளாதார அல்லது அறிவியல் போன்ற எந்த வளர்ச்சிக்கும் பயன் இல்லாத பொது ஏன் அவர்களுக்கு நம்மை மகிழ்விப்பதற்காக மட்டும் இவ்வளவு பணமா?

அடுத்தது கணினி ...
 அது மனிதன் சிரமத்தை குறைக்க ...சில வேலைகளை சுலபமாக கண்டுபிடிக்கப்பட்டதாக நினைத்திருந்தேன்..ஆனால் நான் இப்பொழுது  கேட்கும் செய்திகள் தான் இதுவும் முரண்பாடான ஒன்றோ என்று எண்ணவைக்கிறது.
  கணினி துறையில் வேலைபார்க்கும் பலர் சொல்லிகேள்வி....எல்லோர் உடல் நல்லமும்  வேலை பாலு காரணமாக பாதிக்கபட்டிருபது  தெரிகிறது....
  ஆகா மனிதனின் வேலை பாலுவை குறைக்க ஏற்படுத்தப்பட்ட கணினியே அவனுக்கு உடல் நலம் குறைய காரணமாக இருப்பது கணினி மட்டும் காரணமா அல்லது நாம் அதை பலு ஆக்கி கொள்கிறோமா நம் ஆசை காரணமாக?

No comments:

Post a Comment