என்னை நீடகாலமாக வருத்தும் விஷம் இது.நான் பெண்கள் சுகந்திரம், உரிமை இவற்றில் நம்பிக்கை கொண்டவள் அல்ல ஆனால் பெண்களையும் ஒரு ஊயிர் ,உணர்வு ஆசைகள் இவை அனைத்தும் கொண்ட ஒரு உயிராக நடத்தப்பட வேண்டும் என்று விரும்பும் ஒரு ஜீவன். ஆனால் நான் பார்ப்பது 95% அப்படி பெண்கள் நடத்தபடுவதிலை.பெண்களை ஒரு தனி ஜாதியாகவே கருதி நடத்துகின்றனர் பெருபாலான ஆண்கள் பெண்ணை பெற்றவர்களுக்கும் அதே கெதிதான்.பெண்கள் திருமணம் ஆகிவந்தலே அவர்கள் தங்கள் பெற்றோரை மறந்து விட வேண்டும். அந்த பெற்றோர்ரும் அவர்களை மறந்துவிடவேண்டும்..என்று நினைக்கும் கணவர் மற்றும் அவர் வீட்டார்
ஆனால் தங்கள் பெண்ணுக்கு இந்த சட்டம் கிடையாது... நல்ல ந்யாயம்....இது தான் இவர்கள் பாஷயையில் நல்ல மனைவி .
நான் எங்கோ இதை சொல்லி கேள்வி.. பெண்ணை கொடுதத்வர்கள் தான் பெருமை படவேண்டும்.. ஆணை பெற்றவர்கள் தான் கை ஏந்துபவர்கள்..அதனால் சட்டங்கள் மிரட்டல்கள் போட உரிமை இல்லை என்று.இருப்பது ௨௫ காலம் சீரடி பாலுட்டி வளர்த்த பெண்ணை ஒரு இணை இல்ல பொக்கிஷத்தை தூக்கி அப்படியே இன்னொருவருக்கு சமையல்காரியாக தாசியாக,வேலைகாரியாக..இப்படி பலவேலைகள் பார்க்க தரும் பெற்றோருக்கு கிடைக்கும் மதிப்பு????மிக மிக சிறு சதவிகித ஆண்களே பெண்களின் பெற்றோரை தன் பெற்றோர்ரக நினைகிறார்கள்.மரியாதை தருகிறார்கள்.ஆனால் பலர் தங்கள் பெற்றோர்ரை தன் மனைவி மதிக்கவேண்டும் தன் பெற்றோராக கருதவேண்டும் என்று நினைக்கிறாகளே..ஆனால் அதே நமக்கும் பொருந்தும் என்று ஏன் நினைப்பதில்லை.ஆண்களே..கொஞ்சம் இணைத்து பாருங்கள்.....உங்களுக்காக தன்னுடைய எல்லாவற்றையும் விட்டு வரும் அந்த பெண்ணுக்காக அவள் பெற்றோரையும் மதிக்க ,அவர்கள் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்...ஆண்களை பெற்ற பெற்றோரை .....தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு எல்ல ஜீவனுக்கும் உணர்வுகள் உண்டு மதிக்க சிறுவயதில் இருந்தே தயவு செய்து கற்றுத்தாருங்கள்.
No comments:
Post a Comment